எள் பூரண கொழுக்கட்டை
தேவையான பொருட்கள்.
வெல்லம் - 1/4 கிலோ
எள் - 50 கிராம்
அரிசி - 2 ஆழாக்கு
ஏலக்காய் - 4
உப்பு - சிறிதளவு
எள் - 50 கிராம்
அரிசி - 2 ஆழாக்கு
ஏலக்காய் - 4
உப்பு - சிறிதளவு
செய்யும் முறை
பச்சரிசியை நன்கு கழுவி அரை மணி நேரம் ஊறவைத்து பின் நிழலில் உலர்த்தி மாவாக அரைத்துக் கொள்ளவும்.
மாவை இட்லி குண்டானில் ஆவிகட்டி எடுத்து வைத்துக் கொள்ளவும்.
இரண்டு டம்ளர் தண்ணீரில் சிறிது உப்பு சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும்.
வாய் அகண்ட குண்டானில் மாவைக் கொட்டி கொதிக்கும் தண்ணீரை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து பிசையவும். தண்ணீர் நன்கு கொதித்துக் கொண்டிருக்க வேண்டும். அதுதான் மிகவும் முக்கியம்.
ஏலக்காயை சர்க்கரை வைத்து அரைத்து மாவுடன் சேர்த்துக் கொள்ளவும்.
மாவு தளதளவென்று வந்ததும் அதனை தனியாக எடுத்து வைத்துவிடவும்.
வெல்லத்தை பொடியாக இடித்துக்கொண்டு அதனுடன் எள்ளையும் தூளாக்கிப் போடவும்.
தற்போது கைகளில் எண்ணெய் தேய்த்துக் கொண்டு பெரிய எலுமிச்சைப் பழ அளவு மாவை எடுத்து கையிலேயே அதனை திறட்டி சிறு அளவு தோசைப் போல செய்து அதனுள் மேற்கூறிய பூரணத்தை வைத்து சோமாஸ் போல மூடவும்.
இப்படியே அனைத்து மாவையும் செய்து வைத்துக் கொள்ளவும்.
அடுப்பில் இட்லி குண்டானை வைத்து சிறிது சிறிதாக கொழுக்கட்டைகளை அடுக்கி வேக வைத்து இறக்கவும்.
மிகவும் ருசியான பூரணம் வைத்த கொழுக்கட்டை தயார்.
No comments:
Post a Comment