மாங்காய் பச்சடி
தேவையான பொருட்கள்
மாங்காய் - 2
உப்பு - 2 தேக்கரண்டி
1 எலுமிச்சை
நல்லெண்ணைய் தேவையான அளவு
உப்பு - 2 தேக்கரண்டி
1 எலுமிச்சை
நல்லெண்ணைய் தேவையான அளவு
தாளிக்க:
மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
பெருங்காயத்தூள் - 1 தேக்கரண்டி
கடுகு - 1 தேக்கரண்டி
வெந்தயப் பவுடர் - 1 தேக்கரண்டி
செய்முறை
மாங்காயை துண்டு துண்டாக அறிந்து அதனுடன் உப்பு, எலுமிச்சைசாறு சேர்த்து ஊற விடவேண்டும்.
அதன் பின் வாணலியில் எண்ணைய் ஊற்றி கடுகு தாளித்து அடுப்பை அணைத்து விட்டு சூடான எண்ணையிலேயே பெருங்காயத்தூள், வெந்தயத்தூள், மிளகாய் தூள் சேர்த்து ஆற விடவும்.
ஆறிய பின்னர் அதை அப்படியே ஊற வைத்த மாங்காய் கலவையில் போட்டு நன்கு கலக்கி உபயோகப்படுத்தவும்.
சுவையான, காரமான மாங்காய் பச்சடி தயார்.
No comments:
Post a Comment