தெரிந்ததும் தெரியாததும்
முட்டையைப் பயன்படுத்தி எந்த உணவு செய்தாலும் அதில் நிச்சயமாக மஞ்சள் தூளும், சிறிது மிளகு தூளும் சேர்த்து செய்வது நல்லது.
- பொறியல் அல்லது நூடுல்ஸ் வகைகளில் முட்டையை சேர்ப்பதாக இருந்தால் தனியாக அதனை பொறித்து பின்னர் சேர்ப்பது சுவையாக இருக்கும்.
- பொறியல் மற்றும் நூடுல்ஸ் வகைகளில் நேரடியாக பச்சை முட்டையை சேர்த்து கிளறுவதால் நாம் செய்யும் உணவு பொருள் குழகுழப்பாக மாறுவதுடன் ஆறியதும் முட்டை நாற்றம் அதிகமாக இருக்கும்.
- பொங்கல் செய்யும் போது, தாளிக்க பயன்படுத்தும் மிளகை அப்படியே முழுசாக போடுவதால் அதன் நன்மை உடலுக்கு முழுதாகப் போய்ச் சேருவதில்லை.
- அப்படி இல்லாமல் மிளகை ஒன்றும் பாதியுமாக உடைத்து போட்டால் குறைவான மிளகு போட்டாலும் காரம் அதிகமாக இருக்கும், மிளகை தூக்கி எறிய முடியாது.
No comments:
Post a Comment