பூசணி மோர்க் குழம்பு
தேவையான பொருட்கள்:
தயிர் 1/2 லிட்டர்
மஞ்சள் தூள் 1/4 தேக்கரண்டி
தேவைக்கேற்ற உப்பு
துவரம் பருப்பு 2 தேக்கரண்டி
கடலைப்பருப்பு 2 தேக்கரண்டி
தேங்காய் 1 மூடி
சீரகம் 1/4 தேக்கரண்டி
தனியா 1 தேக்கரண்டி
இஞ்சி 1 துண்டு
கடுகு தாளிப்பிற்கு
பச்சை மிளகாய் 8
வெண்மை நிற கல்யாண பூசணிக்காய் 1 பாகம்
மஞ்சள் தூள் 1/4 தேக்கரண்டி
தேவைக்கேற்ற உப்பு
துவரம் பருப்பு 2 தேக்கரண்டி
கடலைப்பருப்பு 2 தேக்கரண்டி
தேங்காய் 1 மூடி
சீரகம் 1/4 தேக்கரண்டி
தனியா 1 தேக்கரண்டி
இஞ்சி 1 துண்டு
கடுகு தாளிப்பிற்கு
பச்சை மிளகாய் 8
வெண்மை நிற கல்யாண பூசணிக்காய் 1 பாகம்
செய்முறை:
தனியா, து.பருப்பு, க.பருப்பு, சீரகம், பச்சை மிளகாய் ஆகியவற்றை நீரில் சிறிது நேரம் ஊற வைக்க வேண்டும். பின்னர் மிக்ஸியில் தேங்காய்த் துருவலுடன் ஊற வைத்த பொருட்களையும், இஞ்சியையும் விழுதாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
பூசணிக்காயை தோல்சீவி சிறு துண்டுகளாக (விதைகளை நீக்கி) நறுக்கி, வேக வைத்துக்கொள்ள வேண்டும். அரைத்த விழுது, வேகவைத்த பூசணிக்காய், உப்பு, மஞ்சள் தூள் ஆகியவற்றை கடைந்த தயிருடன் கலந்து கொள்ள வேண்டும்.
பின்னர் ஸ்டவ்வில் ஏற்றி ஒரு பொங்கு பொங்கியவுடன் இறக்கி விட வேண்டும். பின் கடுகு தாளித்து கருவேப்பிலை கிள்ளி குழம்பில் போடவும். இதுவே கமகம பூசணிக்காய் மோர்குழம்பு.

No comments:
Post a Comment