Thursday, September 16, 2010

samaiyal kurippu

அம்மணிக் கொழுக்கட்டை

தேவையான பொருள்கள்:
பச்சரிசி மாவு – 1 கப்
தண்ணீர் – 2 கப்
பச்சை மிளகாய் – 3
பெருங்காயம் – 1 சிட்டிகை
உப்பு – தேவையான அளவு (சுமார் 1 டீஸ்பூன்)
தேங்காய்த் துருவல் – 1 டேபிள்டீஸ்பூன் (விரும்பினால்)
தேங்காயெண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்
தாளிக்க: தேங்காயெண்ணெய், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை.
ammani kozhukkattai
 

செய்முறை:
  • பச்சை மிளகாய், உப்பு பெருங்காயத்தை மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ளவும்.
  • ஒரு கப் பச்சரிசி மாவை இரண்டு கப் தண்ணீரில் கட்டிகளில்லாமல் கரைத்துக் கொள்ளவும்.
  • கரைசலுடன் 2 டேபிள்ஸ்பூன் தேங்காயெண்ணெய் விட்டு அடுப்பில் வாணலியில் அடிப்பிடிக்காமல் கைவிடாமல் கிளறவும். (நான்ஸ்டிக் வாணலியில் எளிதாகவும் விரைவாகவும் செய்யலாம்.)
  • மாவு இறுக ஆரம்பிக்கும்போது அரைத்த விழுதையும் சேர்த்துக் கிளறவும். சுமார் 10 நிமிடத்துக்குள் மாவு வெந்து இறுகி வந்ததும் அடுப்பிலிருந்து இறக்கி ஆறவிடவும்.
  • ஆறிய மாவை சுண்டைக்காய் அளவு சிறுசிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.
  • ஒரு குக்கர் பாத்திரம் அல்லது இட்லிதட்டில் எண்ணெய் தடவி, உருண்டைகளை வைத்து குக்கரில் இட்லிவேக வைப்பதுபோல் வெயிட் போடாமல் ஒரு ஐந்து நிமிடம் மட்டும் வேகவைத்து எடுக்கவும்.
  • அடுப்பை அணைத்த உடனே திறந்து மின்விசிறி அடியில் ஆறவிடவும்.
  • அடுப்பில் வாணலியில் எண்ணெய் வைத்து, கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, தேங்காய்த் துருவல் தாளித்து, மெதுவாக உருண்டைகளைச் சேர்த்து உடையாமல் நாசுக்காகக் கிளறிவிடவும்.
  • கொழுக்கட்டைகளைச் சேர்த்தபின் ஒரு நிமிடம் மட்டும் அடுப்பில் வைத்திருந்து கிளறி இறக்கிவிடவும்.

samaiyal kurippu

தேவையான பொருள்கள்:
தக்காளி – 4
மஞ்சள் தூள் – 1 சிட்டிகை
பெருங்காயம் – 1 சிட்டிகை
உப்பு – தேவையான அளவு
கொத்தமல்லித் தழை
பருப்புத் தண்ணீர் – 2 கப்
வறுத்து அரைக்க:
எண்ணெய் – 1 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 2
மிளகு – 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன்
கடலைப் பருப்பு – 1/2 டீஸ்பூன் (விரும்பினால்)
தேங்காய்த் துருவல் – 2 டீஸ்பூன்
தாளிக்க:  எண்ணெய், கடுகு, சீரகம், கறிவேப்பிலை.
poriththa rasam
செய்முறை:
  • எண்ணெயில் காய்ந்த மிளகாய், கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, மிளகை சிவக்க வறுத்து, தேங்காய்த் துருவல், சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.
  • ஒன்றரை கப் தண்ணீரில் இரண்டு தக்காளிப் பழங்களை நன்கு மசித்துக் கொள்ளவும்.
  • மீதமிருக்கும் தக்காளிகளை சிறு துண்டுகளாக நறுக்கி, உப்பு, பெருங்காயம், மஞ்சள் தூளையும் தக்காளிக் கரைசலுடன் சேர்த்து அடுப்பில் வேகவைக்கவும்.
  • தக்காளி வெந்ததும், பருப்பு வேகவைத்த தண்ணீர், அரைத்த விழுது சேர்த்து பொங்கி வந்ததும் அடுப்பை அணைக்கவும்.
  • சிறிது எண்ணெயில் கடுகு, சீரகம், கறிவேப்பிலை தாளித்துக் கொட்டி, கொத்தமல்லித் தழை சேர்க்கவும்.
விழுது சேர்த்ததும் ரசத்தை அதிகம் கொதிக்கவைக்கக் கூடாது. பொங்கிவந்ததும் அடுப்பை அணைத்துவிட வேண்டும். இப்படிச் செய்தால் மண்டி தங்காமல் பரிமாறும்போது அடிவரை கலந்தே பரிமாறலாம். இதனால் அரைத்துவிட்ட பொருள் வீணாகாமல், சுவையும் குறையாமல் இருக்கும்.

samaiyal kurippu

தேவையான பொருள்கள்:
துவரம் பருப்பு – 1 கப்
காய்ந்த மிளகாய் – 2
மிளகு – 2 டீஸ்பூன்
சீரகம் – 1 /2 டீஸ்பூன்
பெருங்காயம்
உப்பு
paruppu podi 1
செய்முறை:
  • துவரம் பருப்பை எண்ணெய் விடாமல் வெறும் வாணலியில் சிவக்க வறுத்துக் கொள்ளவும். (பருப்பு எதுவும் கருகிவிடாமல் கைவிடாமல் வறுக்கவும்.)
  • காய்ந்த மிளகாய், மிளகு, சீரகத்தையும் தனித்தனியாக நன்கு வறுத்துக் கொள்ளவும்.
  • ஆறியதும் எல்லாவற்றையும் மிக்ஸியில் போட்டு, உப்பு, பெருங்காயம் சேர்த்து சற்றே கரகரப்பாக அரைத்து காற்றுப் புகாத பாட்டிலில் எடுத்துவைக்கவும்.
கூட்டு, கறி செய்யும்போது வேகவைத்த பருப்பு இல்லையென்றால் மாற்றாக ஒன்றிரண்டு டீஸ்பூன் இந்தப் பருப்புப் பொடி சேர்த்து உபயோகிக்கலாம்.

சமையல் குறிப்புகள்

கீரையின் மகத்துவம்

  • வாய்ப்புண்ணையும், குடல் புண்ணையும் ஆற்றும் சக்தி மணத்தக்காளிக் கீரைக்கு உள்ளது.
  • காசினிக் கீரையை சாப்பிட்டு வந்தால் ஈரல் வலுப்படும், ரத்தம் சுத்தப்படுத்தப்படும்.
  • எல்லா கீரைகளிலும் உடலுக்கு ஏற்ற ஒரு குணம் உள்ளது. எனவே வாரத்தில் குறைந்தது இரண்டு நாட்களுக்காவது கீரை சாப்பிடவும். 

சமையல் குறிப்பு

தோசை சுடு‌ம்போது

  • தோசமாவுடனகொஞ்சமசோமாவசேர்த்ததோசசுட்டாலஉடம்பிற்கநல்லது. சாப்பிடவுமருசியாஇருக்கும்.
  • ரவதோசசெய்யுமபோதஇரண்டஸ்பூனகடலமாவசேர்த்தசெய்தாலதோசநன்கசிவந்தமொறமொறுவென்றிருக்கும்.  

samaiyal kurippu

 உருளைக் கிழங்கின் மகத்துவம்


  • உருளைக் கிழங்கு எல்லோருக்கும் பிடித்தமான உணவு. அதனை எப்படி செய்தாலும் சாப்பிடலாம்.
  • உருளைக் கிழங்கை வேக வைக்கும்போது அதில் சிறிது உப்பு போட்டு வேக வைத்தால் பிளந்து போகாமல் இருக்கும்.
  • தயிர் வடைக்கு அரைக்கும் மாவில் வேக வைத்த உருளைக் கிழங்கை சேர்த்தால் வடை சுவையாக இருக்கும்.

Tuesday, September 14, 2010

சமையல் குறிப்புகள்

த‌ெ‌ரி‌ந்தது‌ம் தெ‌ரியாதது‌ம்
  • மு‌ட்டையை‌ப் பய‌ன்படு‌த்‌தி எ‌ந்த உணவு செ‌ய்தாலு‌ம் அ‌தி‌ல் ‌நி‌ச்சயமாக ம‌ஞ்ச‌ள் தூளு‌ம், ‌சி‌றிது ‌மிளகு தூளு‌ம் சே‌ர்‌த்து‌ செ‌ய்வது ந‌ல்லது.
  • பொ‌றிய‌ல் அ‌ல்லது நூடு‌ல்‌ஸ் வகைக‌ளி‌ல் மு‌ட்டையை சே‌ர்‌ப்பதாக இரு‌ந்தா‌ல் த‌னியாக அதனை பொ‌றி‌த்து ‌பி‌ன்ன‌ர் சே‌ர்‌ப்பது சுவையாக இரு‌க்கு‌ம்.
  • பொ‌றிய‌ல் ம‌ற்று‌ம் நூடு‌ல்‌ஸ் வகைக‌ளி‌ல் நேரடியாக ப‌ச்சை மு‌ட்டையை சே‌ர்‌த்து ‌கிளறுவதா‌ல் நா‌ம் செ‌ய்யு‌ம் உணவு பொரு‌ள் குழகுழ‌ப்பாக மாறுவதுட‌ன் ஆ‌றியது‌ம் மு‌ட்டை நா‌ற்ற‌ம் அ‌திகமாக இரு‌க்கு‌ம்.
  • பொ‌ங்க‌ல் செ‌ய்யு‌ம் போது, தா‌ளி‌க்க பய‌ன்படு‌த்து‌ம் ‌மிளகை அ‌ப்படியே முழுசாக போடுவதா‌ல் அத‌ன் ந‌ன்மை உடலு‌க்கு முழுதாக‌‌ப் போ‌ய்‌‌ச் சேருவ‌தி‌ல்லை.
  • அ‌ப்படி இ‌ல்லாம‌ல் ‌மிளகை ஒ‌ன்று‌ம் பா‌தியுமாக உடை‌த்து போ‌ட்டா‌ல் குறைவான ‌மிளகு போ‌ட்டாலு‌ம் கார‌ம் அ‌திகமாக இரு‌க்கு‌ம், ‌மிளகை தூ‌க்‌கி எ‌றிய முடியாது. 

சமையல் குறிப்புகள்

எ‌ரிவாயுவை சே‌மி‌க்க
  •            எ‌ரிவாயுவை சே‌மி‌க்க பல வ‌ழிக‌ள் உ‌ள்ளன. அதாவது கு‌க்கரை‌ப் ப‌ய்னபடு‌த்துவதே ந‌ல்ல ‌விஷய‌ம்.
  •           அ‌திலு‌ம் ‌சிலரு‌க்கு கு‌க்க‌ரி‌‌‌ல் வேக வை‌த்த சாத‌ம் ‌பிடி‌க்காது. வடி‌த்து சா‌ப்‌பி‌ட்டா‌ல் தா‌ன் ‌பிடி‌க்கு‌ம். இதுபோ‌ன்றவ‌ர்களு‌ம் எ‌ரிவாயுவை சே‌மி‌க்கலா‌ம்.
  •        எ‌ப்படி எ‌ன்று பாரு‌ங்க‌ள். அதாவது, சாத‌த்தை பா‌தி வெ‌ந்த உடனேயே ‌ந‌ன்கு ‌‌கிள‌றி இற‌க்‌கி வை‌த்து ‌மூடி போ‌ட்டு மூடி ‌விடு‌ங்க‌ள்.
  •          ச‌ரியாக 5 ‌நி‌மிட‌ம் க‌ழி‌த்து சாத‌த்தை ‌கிள‌றி பாரு‌ங்க‌ள். உ‌ங்களு‌க்கு‌த் தேவையான அளவு வெ‌ந்து இரு‌க்கு‌ம். இ‌ல்லை எ‌ன்றா‌ல் இ‌ன்னு‌ம் ‌சி‌றிது நேர‌ம் மூடி வையு‌ங்க‌‌ள்.
  •            உ‌ங்களு‌க்கு‌த் தேவையான அள‌வி‌ற்கு சாத‌ம் வெ‌ந்து‌வி‌‌ட்டா‌ல் அதனை வடி‌த்து ‌விடு‌ங்க‌ள். கொ‌ஞ்ச நேர‌த்‌தி‌ல் ‌நி‌மி‌த்‌தி ஆற வை‌த்து‌விடு‌ங்க‌ள் அ‌வ்வளவுதா‌ன் உ‌ங்களு‌க்கு‌த் தேவையான சாதமு‌ம் தயா‌ர், எ‌ரிவாயுவு‌ம் ‌மி‌ச்சமாகு‌ம். 

samaiyal kurippu

பூண்டு புதினா தோசை


தேவையான பொருட்கள் :
ஆளு தோசை மாவு - 2 கப்
பூண்டு - 20 பற்கள்

புதினா தலை பொடியாக நறுக்கியது - 2 டேபிள்ஸ்பூன்
சீரகம் - அரை டீஸ்பூன்

பச்சை மிளகாய் - 1
எண்ணெய் - தேவைக்கேற்ப

செய்முறை :
  • பூண்டுப் பார்க்கலை தோலுரித்து, நீளவாக்கில் இரண்டாக நறுக்கி எடுத்துக்கொள்ளுங்கள்.
  • மிளகாயை மோடியாக நறுக்கி எடுத்துக்கொள்ளுங்கள்.
  • டீஸ்பூன் எண்ணெய் விட்டு பூண்டை அரைப்பதமாக வதக்கி எடுத்துக்கொள்ளுங்கள்.
  • டீஸ்பூன் எண்ணெய் விட்டு புதினாவை லேசாக வதக்கி எடுத்துக்கொள்ளுங்கள்.
  • மாவை ஊத்தப்பமாக ஊற்றி அதில் சீரகம் சிறிது தேய்த்துப் போட்டு, அதன் மீது வதக்கிய பூண்டு + புதினாவை பதியவிடுங்கள்.
  • ஒவொரு ஊத்தாப்பத்திர்க்கும் 5-லிருந்து 7 துண்டு பூண்டு பதிக்கலாம்.
  • எண்ணெய் விட்டு வேகவைத்து, பின் திருப்பிப் போட்டு மேலும் சிறிது எண்ணெய் விட்டு வேகவைத்து எடுக்கவும்.

samaiyal kurippu

வாழைப்பூ வாடை
தேவையான பொருட்கள் :
வாழைப்பூ - 2 கைப்பிடி அளவு
பெரிய வெங்காயம் - 1
துவரம்பருப்பு - அரை கப்
காய்ந்த மிளகாய் - 12
சோம்பு - அரை டீஸ்பூன்
சீரகம் - அரை டீஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
கறிவேப்பிலை - தேவையான அளவு
மல்லித்தழை சிறிது - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை :
  1. வாழைப்பூவை நரம்பை எடுத்து சுத்தம் செய்யவும்.
  2. வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  3. துவரம் பருப்பை ஊறவைத்துப் அரைகுறையாக அரைத்துக் கொள்ளவும்.
  4. காய்ந்த மிளகாய் + சோம்பு + சீரகம் + உப்பு ஆகியவற்றை லேசாக தண்ணீர் தெளித்து விழுதாக அரைத்தெடுக்கவும்.
  5. வாழைப்பூவை அம்மியில் வைத்து, ஒன்றிரண்டாக அரைத்து, அதன் துவர்ப்பு போக, நன்றாகப் பிழிந்துவிடவும்.
  6. அத்துடன் அரைத்த விழுது + பருப்புக் கலவையைக் கலந்து வெங்காயம் + பொடியாக நறுக்கிய மல்லித்தழை + கறிவேப்பிலை ஆகியவற்றையும் சேர்த்துப் பிசையவும்.
  7. வாணலியில் எண்ணெயைக் காயவைத்து, பிசைந்த மாவை சிறு வடைகளாகத் தட்டி, பொன்னிறமாக வேகவைக்கவும். ருசியான வாழைப்பூ வடை ரெடி.

Monday, September 13, 2010

samaiyal kurippu

எ‌ள் பூரண கொழு‌க்க‌ட்டை

தேவையா பொரு‌ட்க‌ள்.

வெ‌ல்ல‌ம் - 1/4 ‌‌கிலே
எ‌ள் - 50 ‌கிரா‌ம
அ‌ரி‌சி - 2 ஆழா‌க்க
ஏல‌க்கா‌ய் - 4
உ‌ப்பு - ‌சி‌றிதளவ

செ‌ய்யு‌மமுற

             ப‌ச்ச‌ரி‌சியந‌ன்ககழு‌வி அரம‌ணி நேர‌மஊற‌வை‌த்து ‌பி‌ன்‌ ‌நிழ‌லி‌லஉல‌‌ர்‌த்‌தி மாவாஅரை‌த்து‌ககொ‌ள்ளவு‌ம்.

          மாவஇ‌ட்‌லி கு‌ண்டா‌னி‌லஆ‌விக‌ட்டி எடு‌த்தவை‌த்து‌ககொ‌ள்ளவு‌ம்.

         இர‌ண்டு ட‌ம்ள‌ர் த‌ண்‌ணீ‌ரி‌ல் ‌சி‌றிது உ‌ப்பு சே‌ர்‌த்து ந‌ன்கு கொ‌தி‌க்க வை‌க்கவு‌ம்.

         வா‌யஅ‌க‌ண்கு‌ண்டா‌னி‌லமாவை‌ககொ‌ட்டி கொ‌தி‌க்கு‌ம் ‌த‌ண்‌ணீரை கொ‌ஞ்‌ச‌மகொ‌ஞ்ச‌மாசே‌ர்‌த்து ‌பிசையவு‌ம். த‌ண்‌ணீ‌ர் ந‌ன்கு கொ‌தி‌‌த்து‌க் கொ‌ண்டிரு‌‌க்க வே‌ண்டு‌ம். அதுதா‌ன் ‌மிகவு‌ம் மு‌க்‌கிய‌ம்.

        ஏல‌க்காயச‌ர்‌க்கரவை‌த்தஅரை‌த்தமாவுட‌னசே‌ர்‌த்து‌ககொ‌ள்ளவு‌ம்.

        மாவதளதளவெ‌ன்றவ‌ந்தது‌மஅதனத‌னியாஎடு‌த்தவை‌த்து‌வி‌டவு‌ம்.

         வெ‌ல்ல‌த்தபொடியாஇடி‌த்து‌க்கொ‌ண்டஅதனுட‌னஎ‌ள்ளையு‌மதூளா‌க்‌கி‌‌பபோடவு‌ம்.

           த‌‌ற்போதகைக‌ளி‌லஎ‌ண்ணெ‌யதே‌ய்‌த்து‌ககொ‌ண்டு பெ‌ரிய எலு‌மி‌ச்சை‌பஅள‌வமாவஎடு‌த்தகை‌யிலேயஅதனை ‌திற‌ட்டி ‌‌சிறஅள‌வதோசை‌பபோசெ‌ய்தஅதனு‌ளமே‌ற்கூ‌றிபூரண‌த்தவை‌த்து சோமா‌‌ஸ் பேமூடவு‌ம்.

          இ‌ப்படியஅனை‌த்தமாவையு‌மசெ‌ய்தவை‌த்து‌ககொ‌‌ள்ளவு‌ம்.

          அடு‌ப்‌பி‌லஇ‌ட்‌லி கு‌ண்டானவை‌த்து ‌சி‌றிது ‌சி‌றிதாகொழு‌க்க‌ட்டைகளஅடு‌க்‌கி வேவை‌த்தஇற‌க்கவு‌ம்.

‌‌          மிகவு‌ம் ரு‌சியான பூரண‌மவை‌த்கொழு‌க்க‌ட்டதயா‌ர்.

samaiyal kurippu

மா‌ங்கா‌ய் ப‌ச்ச‌டி
தேவையான பொருட்கள்
மாங்காய் - 2
உப்பு - 2 தே‌க்கர‌ண்டி
1 எலுமிச்சை
நல்லெண்ணைய் தேவையாஅளவ

தாளிக்க:

மிளகாய் தூள் - 2 தே‌க்கர‌ண்டி
பெருங்காயத்தூள் - 1 தே‌க்கர‌ண்டி
கடுகு - 1 தே‌‌க்கர‌ண்டி
வெந்தயப் பவுடர் - 1 தே‌க்கர‌ண்டி

செய்முற

              மாங்காயை து‌ண்டு து‌ண்டாக அ‌றி‌ந்து அதனுட‌ன் உப்பு, எலுமிச்சைசாறு சேர்த்து ஊற விடவேண்டும்.  
            அதன் பின் வாணலியில் எண்ணைய் ஊற்றி கடுகு தாளித்து அடுப்பை அணைத்து விட்டு சூடான எண்ணையிலேயே பெருங்காயத்தூள், வெந்தயத்தூள், மிளகாய் தூள் சேர்த்து ஆற ‌விடவு‌ம். 
          ஆ‌றிய ‌பி‌ன்ன‌ர் அதை அப்படியே ஊற வைத்த மாங்காய் கலவையில் போட்டு நன்கு கலக்கி உபயோகப்படுத்தவும்.  
         சுவையான, காரமான மாங்காய் ப‌ச்சடி தயா‌ர்.

samaiyal kurippu

பூசணி மோர்க் குழம்பு

தேவையான பொருட்கள்:

தயிர் 1/2 லிட்டர்
மஞ்சள் தூள் 1/4 தே‌க்கர‌ண்டி
தேவைக்கேற்ற உப்பு
துவரம் பருப்பு 2 தே‌க்கர‌ண்டி
கடலைப்பருப்பு 2 தே‌க்கர‌ண்டி
தேங்காய் 1 மூடி
சீரகம் 1/4 தே‌க்கர‌ண்டி
தனியா 1 தே‌க்கர‌ண்டி
இஞ்சி 1 துண்டு
கடுகு தாளிப்பிற்கு
பச்சை மிளகாய் 8
வெண்மை நிற கல்யாண பூசணிக்காய் 1 பாக‌ம்

செய்முறை:
             தனியா, து.பருப்பு, க.பருப்பு, சீரகம், பச்சை மிளகாய் ஆகியவற்றை நீரில் சிறிது நேரம் ஊற வைக்க வேண்டும். பின்னர் மிக்ஸியில் தேங்காய்த் துருவலுடன் ஊற வைத்த பொருட்களையும், இஞ்சியையும் விழுதாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

       பூசணிக்காயை தோல்சீவி சிறு துண்டுகளாக (விதைகளை நீக்கி) நறு‌க்‌கி, வேக வைத்துக்கொள்ள வேண்டும். அரைத்த விழுது, வேகவைத்த பூசணிக்காய், உப்பு, மஞ்சள் தூள் ஆகியவற்றை கடைந்த தயிருடன் கலந்து கொள்ள வேண்டும்.

           பின்னர் ஸ்டவ்வில் ஏற்றி ஒரு பொங்கு பொங்கியவுடன் இறக்கி விட வேண்டும். பின் கடுகு தாளித்து கருவேப்பிலை கிள்ளி குழம்பில் போடவும். இதுவே கமகம பூசணிக்காய் மோர்குழம்பு.

samaiyal kurippu

தோசை சுடு‌ம்போது

  • தோசமாவுடனகொஞ்சமசோமாவசேர்த்ததோசசுட்டாலஉடம்பிற்கநல்லது. சாப்பிடவுமருசியாஇருக்கும்.

  • ரவதோசசெய்யுமபோதஇரண்டஸ்பூனகடலமாவசேர்த்தசெய்தாலதோசநன்கசிவந்தமொறமொறுவென்றிருக்கும்.

samaiyal kurippu

உப்பு அதிகரித்துவிட்டால்

  • குழம்பில் அதிகமாக உப்பு சேர்ந்துவிட்டால் கொதிக்கும் நிலையிலேயே அதில் கொஞ்சம் தண்ணீரும், மிளகாய் தூளும் போட்டு குழம்பிள் அளவை அதிகரித்துவிடலாம்.
  • குழம்பில் உப்பு அதிகமானது சாப்பிடும்போது தெரிந்தால், ஒரு கைப்பிடி சாதத்தை வெள்ளைத் துணியில் போட்டு கட்டி அதனை குழம்பில் போட்டு சிறிது நேரம் கழித்து எடுத்துவிட்டால் உப்பு குறைந்துவிடும்.
  • பொறியல், கூட்டு போன்றவற்றில் உப்பு அதிகரித்துவிட்டால் தேங்காய் துருவல் சேர்த்து விடலாம்.

samaiyal kurippu

  • வறுத்த வேர்கடலையை சிறிய துண்டுகளாக்கி பீன்ஸ், மற்ற காய்கறிகளுடன் சேர்த்து சமைத்தால் ருசியாக இருக்கும். 
  • டையாபெடிக்ஸ் (நீரிழிவு நோய்) இருப்பவர்கள் தினமும் வெந்தயப் பொடியை சாப்பிட்டால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைக்கலாம். 
  • தயிர் செய்ய வேண்டும். ஆனால் பாலில் போட தயிரோ, மோரோ இல்லையென்றால் மிளகாய் வற்றலை உடைத்து பாலில் போடவும். அடுத்த நாள் தயிர் ரெடி.

samaiyal kurippu

ஓலை பக்கோடா 

தேவையான பொருட்கள்:


  • கடலை மாவு – 3 கப்
  • அரிசி மாவு – 1கப்
  • வெள்ளை எள் – 1/4 கப்
  • பூண்டு – 10 பல் (அரைத்துக் கொள்ளவும்)
  • வறுத்த நிலக்கடலை – 1 கை ( பொடித்து கொள்ளவும்)
  • பெருங்காயத் தூள் – சிறிதளவு
  • சோடா உப்பு – சிறிதளவு
  • மிளகாய் தூள் – 3ஸ்பூன்
  • தண்ணீர் – தேவையான அளவு
  • வெண்ணெய் – சிறிதளவு
  • உப்பு – தேவையான அளவு
  • எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை:
  • முதலில் இரண்டு மாவு வகைகளையும் சல்லடையில் சலித்துக் கொள்ளவும்…ஏனென்றால் அதில் ஏதும் இருந்தால் எண்ணெய்யில் பொரிக்கும் போது வெடிக்கும் வாய்ப்புள்ளது.
  • மாவுடன் எள், பூண்டு, நிலக்கடலை, பெருங்காயத் தூள், சோடா உப்பு, மிளகாய் தூள், உப்பு ஆகியவற்றை தண்ணீர் இல்லாமல் நன்கு கலந்து கொள்ளவும்.
  • பின்பு வெண்ணெய், சிறிது எண்ணெய் சூடாக்கி மாவுக் கலவையுடன் கொட்டி தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.
  • வாணலியில் பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி காய வைக்கவும்..
  • நன்கு காய்ந்தவுடன் அச்சில் மாவை வைத்து எண்ணெய்யில் பிளியவும்…
  • நன்கு சிவந்தவுடன் எடுக்கவும்.
  • சுவையான ஓலை பக்கோடா தயார்!

Friday, September 10, 2010

samaiyal kurippu

டேஸ்டி கோகனட் ரைஸ்


தேவையானப் பொருட்கள்:
அரிசி-2கப்
தேங்காய்-  1
பெறிய வெங்காயம்-   1
தக்காளி-  1
பட்டை-  4துண்டு
ஏலம்-  4
பூண்டு-   5பற்கள்
இஞ்சிபூண்டுபேஸ்ட் -3 டீ ஸ்பூன்
சோம்பு பவுடர் -1 டீ ஸ்பூன்
மஞ்சள் தூள்-அரை டீ ஸ்பூன்
கறிவேப்பிலை முற்றியது-2கொத்து
புதினா இலை- சிறிதளவு
உப்பு தேவைக்கேற்ப
செய்முறை:
          முதலில்   தேங்காயை மிக்ஸியில் அரைத்து நான்கு கப் பால் எடுக்கவும் .வெங்காயம் தக்காளி அரிந்து கொள்ளவும்.பூண்டு இரண்டாக கட் பண்ணவும்.சட்டியில் எண்ணை ஊற்றி சூடான உடன் பட்டை ஏலம் போடவும்.பிறகு வெங்காயம் தக்காளி பூண்டு இஞ்சிபூண்டுபேஸ்ட் எல்லாவற்றையும் சேர்த்து லைட்டாக வதக்கி தேங்காய் பால் சேர்க்கவும்.அதில் மஞ்சள் தூள் சோம்பு பவுடர் புதினா இலை சேர்த்து ஒரு கொதி வரவும் அரிசியை களைந்து போடவும்.சிறுதீயில் வேக விடவும்.சுவையான கோகனட் ரைஸ் தயார்.இதில்  மஞ்சள்தூள் சேர்க்காமலும் செய்யலாம். மட்டன்,சிக்கன்,இரால்,க்ரேவி இதற்க்கு ஏற்ற சைட் டிஷ்.

Thursday, September 2, 2010

சமையல் குறிப்பு

                                                                               மருத்துவ குணம் நிறைந்த மேத்தி புலாவ்


தேவையானப் பொருட்கள்:
புழுங்கல் அரிசி – 3 டம்ளர் அரை மணி நேரம் ஊற வைத்தது
நல்லெண்ணெய்- 2 டேபிள் ஸ்பூன்,கடலை எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்,தேங்காய் எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்,விளக்கெண்ணய்-2 டேபிள் ஸ்பூன்,சூரிய காந்தி எண்ணெய்- 2 டேபிள் ஸ்பூன், மக்காச்சோள எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்.
பெரிய வெங்காயம் (நறுக்கியது) – 2
. பச்சை மிளகாய் (கீறியது) – 3
. வெந்தயம் – 10 டீஸ்பூன்
. பட்டை – 1
. பூண்டு – 2
. கறிவேப்பில்லை – 1 கொத்து     
. உப்பு தேவைக்கேற்ப
செய்முறை:
குக்கர் சூடானவுடன் ஆயிலை ஊற்றி பட்டை,வெந்தயம்,பூண்டு,வெங்காயம்,பச்சை மிளகாய்,கறிவேப்பில்லை நன்றாக வதக்கவும்
வதக்கியதும் 5 டம்ளர்தண்ணீர் ஊற்றி கொதிக்கும்பொழுது ஊற வைத்த அரிசியை போடவும்.3.4 விசில் விடவும்.
இப்போது மருத்துவ குணம் நிறைந்த மேத்தி புலாவ் ரெடி.

சமையல் குறிப்பு

                                                                                                               காளான் சாதம்


தேவையானப் பொருட்கள்:
உதிராக வடித்து வைத்துள்ள சாதம்- 3 கப்
பெரிய வெங்காயம்-2
வெங்காய தாள்- கொஞ்சம்
இஞ்சி – பொடியாக நறுக்கியது- 1/2 ஸ்பூன்
பூண்டு – பொடியாக நறுக்கியது- 1 ஸ்பூன்
பச்சை மிளகாய்-5
மிளகுதூள்- கொஞ்சம்
அஜினமோட்டோ- கொஞ்சம்
உப்பு – தேவையானவை
நெய் [அ] எண்ணெய்- 3 ஸ்பூன்
காளான் – 200 கிராம்
செய்முறை:
கெட்டியான வாணலியில் கொஞ்சம் எண்ணெய் [அ] நெய் ஊற்றி வெங்காயத்தை மெல்லியதாக நறுக்கி வதக்கவும்.
அதனுடன் பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டை சேர்த்து வதக்கவும்.
காளானை தேவையான அளவில் கட் செய்து நன்கு நீரில் கழுவி கைகளால் அழுத்தி பிழிந்தால் அதில் நீர் எல்லாம் வந்து விடும்.
அதை வெங்காயத்தில் சேர்த்து வதக்கவும். மிளகுதூள், அஜினமோட்டோ, உப்பு சேர்த்து வதக்கவும்.
அடுப்பை சிம்மில் எரிய விட்டு வதக்கவும். நன்கு சுண்டியபின் 1 ஸ்பூன் நெய் ஊற்றி சாதத்தை போட்டு கிளறி இறக்கும் போது
வெங்காயதாளை பொடியாக நறுக்கி மேலே தூவி இறக்கவும். காளான் சாதம் தயார். மசாலா வாசனை வேண்டும் என்றால்
காளானை போடும் போது 1 ஸ்பூன்அஜினமோட்டோ தூவிகொள்ளலாம். 
 
                                        கத்தரிகாய் சாதம்


                   தேவையானப் பொருட்கள்:
அரிசி – 250 கிராம்
கத்தரிகாய் – 200 கிராம்
தக்காளி – 4
பூண்டு – 6 பல்
பட்டை, கிராம்பு, சோம்பு சிறிது
மிளகாய் தூள், கரம் மசாலா – சிறிது
வெங்காயம், மிளகாய், கருவேப்பிலை-தாளிக்க
கொத்துமல்லி இலை, உப்பு
செய்முறை:
அரிசியை உதிரியாக வடித்து கொள்ளவும்.
வாணலியை வைத்து 50 மில்லி எண்ணை ஊற்றி, பட்டை, கிராம்பு, சோம்பு போட்டு
தக்காளி , வெங்காயம், மிளகாய், கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
கத்தரிகாயை நீளவாக்கில் சிறிய துண்டுகளாக நறுக்கவும்.
கத்தரிகாய், உப்பு, மிளகாய் தூள், கரம் மசாலாவை  கலவையுடன் சேர்த்து, சிரிது தண்ணீர்  விட்டு
வேகவைக்கவும்.
கத்தரிகாய் வெந்தவுடன் கொத்துமல்லி இலை,
தூவி இறக்கவும்.
இதனுடன் சாதத்தை சேர்த்து கிளறவும்.
சாதத்துடன் சிறிது நெய் சேர்த்தால் சுவையாக இருக்கும்.
ப்ரட்டை எண்ணெய்யில் பொறித்து சேர்த்தால் சுவையாக இருக்கும்.
தயிர் பச்சடி நல்ல காம்பினேஷன்.

Wednesday, September 1, 2010

சமையல் குறிப்பு

ருசியான புளியோதரை


தேவையானப் பொருட்கள்:
 காய்ந்த மிளகாய் – 10
கடலைப் பருப்பு -2டேபிள்ஸ்பூன்
தனியா- 2 ஸ்பூன்
எள் – 2 டீஸ்பூன்{வறுத்துபொடிக்கவும்}
கடுகு – தாளிக்க
முந்திரிப் பருப்பு-15
புளி – 100 கிராம்
காய்ந்த மிளகாய் – 8
உளுத்தம் பருப்பு -  1 டேபிள்டீஸ்பூன்
கடலைப் பருப்பு  1 டேபிள்ஸ்பூன்
நிலக்கடலை – 50 கிராம்
வெந்தயம் – 1 டீஸ்பூன்
எள் – 2 டீஸ்பூன்
பெருங்காயம் – சிறிது
கறிவேப்பிலை – சிறிது
உப்பு – தேவையான அளவு
மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
பச்சரிசிசாதம் -4 கப்
நல்லெண்ணை – 4 டேபிள்ஸ்பூன்
செய்முறை:
           வாணலியில் நல்லெண்ணை விட்டு, கடுகு, காய்ந்த மிளகாய், உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு,  பெருங்காயம், கறிவேப்பிலை போட்டுதாளிக்கவும் அதனுடன் நிலக்கடலை, வெந்தயம், வெள்ளை எள், பருப்புபோட்டுவதக்கவும் புளியை கெட்டியாகக் கரைத்துக் கொள்ளவும். அதனை இதில் ஊற்றவும் உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து  வதக்கவும்.அதனுடன் உதிரியாக வடித்த சாதம் போட்வும்.சாதம்  பொடி போட்டு நன்கு கிளரவும் சுவையான சாதம் ரெடி இதனை இரவில் செய்தால் காலையில் சாப்பிட்டால்  அதன் சுவை அதிகமாக இருக்கும்.

சமையல் குறிப்பு

 மாம்பழம் கர குழம்பு 
 தேவையான பொருட்கள்:   
=========================
பழுத்த மாம்பழம் - ஒன்று                                                                    
புளி - எலுமிச்சை அளவு
சின்ன வெங்காயம் - அரை கப்
பச்சை மிளகாய் - பன்னிரண்டு
மிளகாய் தூள் - இரண்டு  டீஸ்பூன்
தக்காளி - நான்கு
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை - கால் கப்
கடுகு - கால் டீஸ்பூன்
வெந்தயம் - அரை டீஸ்பூன்
எண்ணெய் - கால் கப்
எண்ணையில்லாமல் வறுத்து பொடிக்க:
=====================================

வெந்தயம் - கால் டீஸ்பூன்
சீரகம் - அரை டீஸ்பூன்
அரிசி - ஒரு டீஸ்பூன்
கடலை பருப்பு - ஒரு டீஸ்பூன்

செய்முறை:
============
* வெங்காயத்தை தோலுரித்து இரண்டாக நறுக்கவும்.
* வறுத்து பொடிக்க வேண்டியத்தை பொடித்து வைத்து கொள்ளவும்.
* பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* மாம்பழத்தை தோலுடன் பெரிது பெரிதாக நறுக்கவும்.
* புளியை இரண்டரை கப் சுடு நீரில் கரைத்து கொள்ளவும்.
* தக்காளியை நீர் விடாமல் ஒன்றும் பாதியுமாக அரைத்து அதில் சிறிது உப்பு மஞ்சள் தூள்,மிளகாய் தூள் சேர்த்து கலந்து புளி நீரில் சேர்த்து கலக்கவும்.
* எண்ணையை காயவைத்து கடுகு,வெந்தயம்,கறிவேப்பிலை தாளித்து வெங்காயம்,பச்சை மிளகாய் சேர்த்து வெங்காயம் சிவக்கும் வரை வதக்கவும்.
* புளி கரைசலை சேர்த்து ஒரு கொதி வந்ததும் மாம்பழ துண்டுகள் சேர்த்து உப்பு சரி பார்த்து தணலை நடுத்தரமாக வைக்கவும்.
* எல்லாம் ஒன்று சேர்ந்து கொதித்து எண்ணெய் கக்கியதும் பொடித்த பொடி தூவி ஒரு நிமிடம் கிளறி இறக்கவும்.


 
 குறிப்பு:
=======
           மாம்பழம் சேர்த்து செய்வதால் இனிப்பாக இருக்குமென்று நினைக்க வேண்டாம்.காரமும்,புளிப்பும் சேர்ந்து அருமையாக இருக்கும்.காண்டிப்பாக அனைவரும் செய்து பார்க்க வேண்டிய ஒரு கார குழம்பு.காரம் கூட குறைய சேர்த்து கொள்ளலாம்.

சமையல் குறிப்பு

 சௌ சௌ கூட்டு
 தேவையான பொருட்கள்:
========================
சௌ சௌ - இரண்டு
பாசி பருப்பு - அரை கப்
பச்சை மிளகாய் - பத்து
கறிவேப்பிலை - ஒரு ஆர்க்
உப்பு  - தேவையான அளவு
மிளகாய் வற்றல் - இரண்டு
தக்காளி - ஒன்று
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்

கால் டீஸ்பூன் எண்ணையில் வறுத்து பொடிப்பதற்கு :
================================================
மிளகு - ஒரு டீஸ்பூன்
சீரகம் - ஒரு டேபிள்ஸ்பூன்
தாளிப்பதற்கு: 
----------------------
தேங்காய் எண்ணெய் - இரண்டு டேபிள்ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
கடுகு - ஒரு டீஸ்பூன்
கடலை பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன்
பெருங்காயம் - ஒரு சிட்டிகை
 தேங்காய் - ஒரு டேபிள்ஸ்பூன்

செய்முறை:
===========
* சௌ சௌவை தோல் சீவி சின்ன சின்ன சதுரங்களாக நறுக்கி கொள்ளவும்.
* தக்காளியை நான்கு துண்டுகளாகி கொள்ளவும்.
* ஒரு பாத்திரத்தில் நருக்கிய சௌ சௌ,தக்காளி,கீறிய பச்சை மிளகாய்கள் ,கறிவேப்பிலை,உப்பு,மிளகாய் வற்றல் மஞ்சள் தூள் சேர்த்து எல்லாம் மூழ்கும் அளவு நீர் சேர்த்து பருப்பு வேகும் வரை கொதிக்க விடவும்.
* நீர் வற்ற வற்ற சேர்த்து கொள்ளவும்.
* பருப்பு வெந்ததும் கூட்டிற்கு தேவையான நீர் சேர்த்து கொதிக்க விடவும்.
* ஒரு கடாயில் தேங்காய் எண்ணெய் ஊற்றி தாளிப்பதை தாளித்து கூட்டில் கொட்டவும்.
* மிளகு சீரக பொடியை சேர்த்து இரண்டு கொதி வந்ததும் இறக்கவும்.

வணக்கம்

உலக தமிழர் அனைவருக்கும் எனது பணிவான வணக்கம். இந்த தளத்தின் மூலம் என்னுடைய கருத்துக்களை தங்களிடம் பகிர்ந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சி.