Thursday, September 16, 2010

samaiyal kurippu

அம்மணிக் கொழுக்கட்டை

தேவையான பொருள்கள்:
பச்சரிசி மாவு – 1 கப்
தண்ணீர் – 2 கப்
பச்சை மிளகாய் – 3
பெருங்காயம் – 1 சிட்டிகை
உப்பு – தேவையான அளவு (சுமார் 1 டீஸ்பூன்)
தேங்காய்த் துருவல் – 1 டேபிள்டீஸ்பூன் (விரும்பினால்)
தேங்காயெண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்
தாளிக்க: தேங்காயெண்ணெய், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை.
ammani kozhukkattai
 

செய்முறை:
  • பச்சை மிளகாய், உப்பு பெருங்காயத்தை மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ளவும்.
  • ஒரு கப் பச்சரிசி மாவை இரண்டு கப் தண்ணீரில் கட்டிகளில்லாமல் கரைத்துக் கொள்ளவும்.
  • கரைசலுடன் 2 டேபிள்ஸ்பூன் தேங்காயெண்ணெய் விட்டு அடுப்பில் வாணலியில் அடிப்பிடிக்காமல் கைவிடாமல் கிளறவும். (நான்ஸ்டிக் வாணலியில் எளிதாகவும் விரைவாகவும் செய்யலாம்.)
  • மாவு இறுக ஆரம்பிக்கும்போது அரைத்த விழுதையும் சேர்த்துக் கிளறவும். சுமார் 10 நிமிடத்துக்குள் மாவு வெந்து இறுகி வந்ததும் அடுப்பிலிருந்து இறக்கி ஆறவிடவும்.
  • ஆறிய மாவை சுண்டைக்காய் அளவு சிறுசிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.
  • ஒரு குக்கர் பாத்திரம் அல்லது இட்லிதட்டில் எண்ணெய் தடவி, உருண்டைகளை வைத்து குக்கரில் இட்லிவேக வைப்பதுபோல் வெயிட் போடாமல் ஒரு ஐந்து நிமிடம் மட்டும் வேகவைத்து எடுக்கவும்.
  • அடுப்பை அணைத்த உடனே திறந்து மின்விசிறி அடியில் ஆறவிடவும்.
  • அடுப்பில் வாணலியில் எண்ணெய் வைத்து, கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, தேங்காய்த் துருவல் தாளித்து, மெதுவாக உருண்டைகளைச் சேர்த்து உடையாமல் நாசுக்காகக் கிளறிவிடவும்.
  • கொழுக்கட்டைகளைச் சேர்த்தபின் ஒரு நிமிடம் மட்டும் அடுப்பில் வைத்திருந்து கிளறி இறக்கிவிடவும்.

samaiyal kurippu

தேவையான பொருள்கள்:
தக்காளி – 4
மஞ்சள் தூள் – 1 சிட்டிகை
பெருங்காயம் – 1 சிட்டிகை
உப்பு – தேவையான அளவு
கொத்தமல்லித் தழை
பருப்புத் தண்ணீர் – 2 கப்
வறுத்து அரைக்க:
எண்ணெய் – 1 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 2
மிளகு – 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன்
கடலைப் பருப்பு – 1/2 டீஸ்பூன் (விரும்பினால்)
தேங்காய்த் துருவல் – 2 டீஸ்பூன்
தாளிக்க:  எண்ணெய், கடுகு, சீரகம், கறிவேப்பிலை.
poriththa rasam
செய்முறை:
  • எண்ணெயில் காய்ந்த மிளகாய், கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, மிளகை சிவக்க வறுத்து, தேங்காய்த் துருவல், சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.
  • ஒன்றரை கப் தண்ணீரில் இரண்டு தக்காளிப் பழங்களை நன்கு மசித்துக் கொள்ளவும்.
  • மீதமிருக்கும் தக்காளிகளை சிறு துண்டுகளாக நறுக்கி, உப்பு, பெருங்காயம், மஞ்சள் தூளையும் தக்காளிக் கரைசலுடன் சேர்த்து அடுப்பில் வேகவைக்கவும்.
  • தக்காளி வெந்ததும், பருப்பு வேகவைத்த தண்ணீர், அரைத்த விழுது சேர்த்து பொங்கி வந்ததும் அடுப்பை அணைக்கவும்.
  • சிறிது எண்ணெயில் கடுகு, சீரகம், கறிவேப்பிலை தாளித்துக் கொட்டி, கொத்தமல்லித் தழை சேர்க்கவும்.
விழுது சேர்த்ததும் ரசத்தை அதிகம் கொதிக்கவைக்கக் கூடாது. பொங்கிவந்ததும் அடுப்பை அணைத்துவிட வேண்டும். இப்படிச் செய்தால் மண்டி தங்காமல் பரிமாறும்போது அடிவரை கலந்தே பரிமாறலாம். இதனால் அரைத்துவிட்ட பொருள் வீணாகாமல், சுவையும் குறையாமல் இருக்கும்.

samaiyal kurippu

தேவையான பொருள்கள்:
துவரம் பருப்பு – 1 கப்
காய்ந்த மிளகாய் – 2
மிளகு – 2 டீஸ்பூன்
சீரகம் – 1 /2 டீஸ்பூன்
பெருங்காயம்
உப்பு
paruppu podi 1
செய்முறை:
  • துவரம் பருப்பை எண்ணெய் விடாமல் வெறும் வாணலியில் சிவக்க வறுத்துக் கொள்ளவும். (பருப்பு எதுவும் கருகிவிடாமல் கைவிடாமல் வறுக்கவும்.)
  • காய்ந்த மிளகாய், மிளகு, சீரகத்தையும் தனித்தனியாக நன்கு வறுத்துக் கொள்ளவும்.
  • ஆறியதும் எல்லாவற்றையும் மிக்ஸியில் போட்டு, உப்பு, பெருங்காயம் சேர்த்து சற்றே கரகரப்பாக அரைத்து காற்றுப் புகாத பாட்டிலில் எடுத்துவைக்கவும்.
கூட்டு, கறி செய்யும்போது வேகவைத்த பருப்பு இல்லையென்றால் மாற்றாக ஒன்றிரண்டு டீஸ்பூன் இந்தப் பருப்புப் பொடி சேர்த்து உபயோகிக்கலாம்.

சமையல் குறிப்புகள்

கீரையின் மகத்துவம்

  • வாய்ப்புண்ணையும், குடல் புண்ணையும் ஆற்றும் சக்தி மணத்தக்காளிக் கீரைக்கு உள்ளது.
  • காசினிக் கீரையை சாப்பிட்டு வந்தால் ஈரல் வலுப்படும், ரத்தம் சுத்தப்படுத்தப்படும்.
  • எல்லா கீரைகளிலும் உடலுக்கு ஏற்ற ஒரு குணம் உள்ளது. எனவே வாரத்தில் குறைந்தது இரண்டு நாட்களுக்காவது கீரை சாப்பிடவும். 

சமையல் குறிப்பு

தோசை சுடு‌ம்போது

  • தோசமாவுடனகொஞ்சமசோமாவசேர்த்ததோசசுட்டாலஉடம்பிற்கநல்லது. சாப்பிடவுமருசியாஇருக்கும்.
  • ரவதோசசெய்யுமபோதஇரண்டஸ்பூனகடலமாவசேர்த்தசெய்தாலதோசநன்கசிவந்தமொறமொறுவென்றிருக்கும்.  

samaiyal kurippu

 உருளைக் கிழங்கின் மகத்துவம்


  • உருளைக் கிழங்கு எல்லோருக்கும் பிடித்தமான உணவு. அதனை எப்படி செய்தாலும் சாப்பிடலாம்.
  • உருளைக் கிழங்கை வேக வைக்கும்போது அதில் சிறிது உப்பு போட்டு வேக வைத்தால் பிளந்து போகாமல் இருக்கும்.
  • தயிர் வடைக்கு அரைக்கும் மாவில் வேக வைத்த உருளைக் கிழங்கை சேர்த்தால் வடை சுவையாக இருக்கும்.

Tuesday, September 14, 2010

சமையல் குறிப்புகள்

த‌ெ‌ரி‌ந்தது‌ம் தெ‌ரியாதது‌ம்
  • மு‌ட்டையை‌ப் பய‌ன்படு‌த்‌தி எ‌ந்த உணவு செ‌ய்தாலு‌ம் அ‌தி‌ல் ‌நி‌ச்சயமாக ம‌ஞ்ச‌ள் தூளு‌ம், ‌சி‌றிது ‌மிளகு தூளு‌ம் சே‌ர்‌த்து‌ செ‌ய்வது ந‌ல்லது.
  • பொ‌றிய‌ல் அ‌ல்லது நூடு‌ல்‌ஸ் வகைக‌ளி‌ல் மு‌ட்டையை சே‌ர்‌ப்பதாக இரு‌ந்தா‌ல் த‌னியாக அதனை பொ‌றி‌த்து ‌பி‌ன்ன‌ர் சே‌ர்‌ப்பது சுவையாக இரு‌க்கு‌ம்.
  • பொ‌றிய‌ல் ம‌ற்று‌ம் நூடு‌ல்‌ஸ் வகைக‌ளி‌ல் நேரடியாக ப‌ச்சை மு‌ட்டையை சே‌ர்‌த்து ‌கிளறுவதா‌ல் நா‌ம் செ‌ய்யு‌ம் உணவு பொரு‌ள் குழகுழ‌ப்பாக மாறுவதுட‌ன் ஆ‌றியது‌ம் மு‌ட்டை நா‌ற்ற‌ம் அ‌திகமாக இரு‌க்கு‌ம்.
  • பொ‌ங்க‌ல் செ‌ய்யு‌ம் போது, தா‌ளி‌க்க பய‌ன்படு‌த்து‌ம் ‌மிளகை அ‌ப்படியே முழுசாக போடுவதா‌ல் அத‌ன் ந‌ன்மை உடலு‌க்கு முழுதாக‌‌ப் போ‌ய்‌‌ச் சேருவ‌தி‌ல்லை.
  • அ‌ப்படி இ‌ல்லாம‌ல் ‌மிளகை ஒ‌ன்று‌ம் பா‌தியுமாக உடை‌த்து போ‌ட்டா‌ல் குறைவான ‌மிளகு போ‌ட்டாலு‌ம் கார‌ம் அ‌திகமாக இரு‌க்கு‌ம், ‌மிளகை தூ‌க்‌கி எ‌றிய முடியாது.